திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் எழில் கொஞ்சும் இயற்கை அழகைக் கண்டுகளிக்க ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்திற்கு வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வதுண்டு.
இந்நிலையில் கரோனா தொற்று இரண்டாம் அலை வீசிவரும் இந்தத் தருணத்தில் சுற்றுலாத் தலம் மூடப்பட்டுள்ளதால் சாலையோர கடை வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிற நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் சுற்றுலாத் தலத்தில் படகு இயக்கவும், இயற்கைப் பூங்கா, சிறுவர்கள் விளையாடும் திடல் உள்ளிட்டவைகளுக்குத் தடைவிதித்து அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஏப். 21) ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலத்தில் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாப் பேருந்துகளிலும் கார்களிலும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்து மீதான இறக்குமதி வரியை நீக்கும் இந்தியா