திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையையும், நீதித் துறையையும் ஒருங்கிணைத்து நிலுவையில் உள்ள 10,098 வழக்குகளை விரைந்து முடிக்க கலந்தாய்வு கூட்டத்தை ஆட்சியர் சிவனருள் நடத்தினார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் எப்படி இவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்து ஆட்சியர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறையும் நீதித்துறையும் பெருந்தொற்று காலகட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் விசாரிக்க படாமல் நிலுவையில் உள்ளதால், இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தன.
பின்பு அந்த வழக்குகளை தவிர்த்து, நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளை காவல்துறை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், விசாரிக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும் பட்சத்தில் அவற்றை நீதித்துறையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட நீதிபதி ஆனந்தன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் இரு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!