ETV Bharat / state

புதிய கட்டிடத்திற்கு பள்ளி மாணவர்களை அழைத்து அடிக்கல் நாட்டிய ஆட்சியர்! - மு க ஸ்டாலின்

பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாணவர்களை அழைத்து அடிக்கல் நாட்டிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களை அழைத்து அடிக்கல் நாட்டிய ஆட்சியர்

author img

By

Published : Feb 2, 2023, 9:07 AM IST

பள்ளி மாணவர்களை அழைத்து அடிக்கல் நாட்டிய ஆட்சியர்

திருப்பத்தூர்: வேலூர் காட்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவைக் காணொலி காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பள்ளி கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் அரவை மற்றப்பள்ளி பகுதியில் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டு சுமார் 52 வருடங்களாக இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள கட்டிடத்தை இடித்து மீண்டும் புதுப்பிக்க சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா, பள்ளியில் பயிலும் மாணவர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழா பூஜையில் செடியைக் கொடுத்து அடிக்கல் நாட்டச் சொன்ன நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், துணை சேர்மன் மோகன், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 'NDPA'-வா? 'NDA'-வா.? பேனரில் கூட்டணி பெயர் மாற்றம்; அண்ணாமலை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.