திருப்பத்தூர் மாவட்ட மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- ஆலங்காயம் - வட்டார் ஒருங்கிணைப்பாளர், வட்டார மேலாளர்
- மாதனூர் - வட்டார ஒருங்கிணைப்பாளர்
வட்டார இயக்க மேலாளர் பதவிக்கான தகுதிகள் மொத்தம்:
- 1. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் கணினி படிப்பில் (MS Office) குறைந்தபட்சம் 6 மாத கால சான்றிதழ் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
- 2. - 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- 3. இது போன்ற திட்டங்களில் (Similar Prcject) குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
4. இம்மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தகுதிகள்:
1. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் கணினி படிப்பில் (IMS Office) குறைந்தபட்சம் 6 மாதகால சான்றிதழ் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
2. 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
3. இது போன்ற திட்டங்களில் {Similar Project) குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
4. சம்மந்தப்பட்ட வட்டாரத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
1. பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
2. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது,வெளிசந்தை (Dutsourcing) முறையில் நிரப்பப்படும்.
3. ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.
4. இருசக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் இருத்தல் வேண்டும்.
5. விண்ணப்பங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் 3-வது தளத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 08.02.2023 அன்று மாலை 05.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
6.08.02.2023 மாலை 05.30 மணிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம்-3 வது தளம், திருப்பத்தூர் மாவட்டம்- 635 601, போன்: 04179-290324 என்ற முகவரியில் அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:Video: Republic Day Celebration:திருச்சியில் நடனம் ஆடிய அமமுக மாமன்ற உறுப்பினர்