திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாற்றம்பள்ளி பகுதிகளில் உள்ள 759 ஊரக பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிடுவதற்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து கதிராமங்கலம் கிராமத்தில் பணிகள் நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த திட்ட, உதவி இயக்குநர்களான நாகராஜன், மகேஷ்பாபு, கண்ணன், ஆறுமுகம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் திருப்பதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.