திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (57). இவர் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 16) மாலை தன்னுடைய மகளின் பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வதற்காக சுந்தரம் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி சென்று மீண்டும் ஆம்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது பெருமாள் பேட்டை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது உள்ள தடுப்புச் சுவரில் சுந்தரத்தின் இருசக்கர வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சுந்தரத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் மோதி தூய்மைப் பணியாளர் பலி - தூய்மைப் பணியாளர் பலி
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நகராட்சித் தூய்மைப் பணியாளர் நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார்.