திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி சிவில் இன்ஜினியர் பூபதி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று பூபதியின் வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கிழே விழுந்த பூபதி, லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பூபதியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த பூபதி கடந்த 6 மாதங்களுக்கு முன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியது தெரியவந்தது.
இதையும் படிங்க: காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட 8 பேர் கைது