திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதிக்குள்பட்ட தாமலேரிமுத்தூர் பகுதியில் மார்ச்.26ஆம் தேதி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்தல் விதிமுறையை மீறி கொண்டுசெல்லப்பட்ட......
அப்போது, அந்த வழியாகச்சென்ற காரை நிறுத்தி அலுவலர்கள் சோதனை செய்தபோது பாமக, அதிமுக கட்சித் துண்டுகள், வேட்டிகள், சீருடை, விசிறி, துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை தேர்தல் விதிமுறையை மீறி கொண்டுசெல்லப்படுவது தெரியவந்தது.
காலதாமதமாக வழக்குப்பதிவு..
இது தொடர்பாக, ஜோலார்பேட்டை அதிமுக தேர்தல் குழு பொறுப்பாளர் அழகிரி, அமைச்சரும் மற்றும் மாவட்டச் செயலாளருமான வீரமணி, அச்சகம் உரிமையாளர் விக்ரம், கார் ஓட்டுநர், கார் உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த புகாரை காலதாமதமாக வழக்குப்பதிவு செய்ததால், தேர்தல் மேற்பார்வையாளர் விஜய் பகதூர் வர்மா கொடுத்த மின்னஞ்சல் புகார் மூலம் தலைமை தேர்தல் அலுவலர், திருப்பத்தூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலுவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவி ட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மே 2 ஆம் தேதி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் - சத்யபிரத சாகு'