திருப்பத்தூர்: வாணியம்பாடி அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் திமுக மாவட்ட மீனவர் அணி அமைப்பாளராக உள்ளார். இவர் நேற்று (ஜூலை 14) மாலை திடீரென வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்குள் குடிபோதையில் நுழைந்தார். பின்பு வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஸ்டான்லி பாபு தலைமையில் கலந்தாய்வு கூட்டத்தின்போது ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கிருந்து வெளியேறியவர் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தேநீர் கடையில் இருந்த திமுக பிரமுகர் அண்ணாமலை மற்றும் அலெக்ஸ் ஆகியோரை தரக்குரைவான வார்த்தைகளால் திட்டினார். மேலும் வாணியம்பாடியில் 15-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெறும் என அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திமுக பிரமுகர் ஒருவரே வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் மற்றும் பொது இடங்களில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி...