திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இன்று(ஆகஸ்ட்.9) பிற்பகல் சென்னை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது, கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காரைக்குடி பகுதியை சேர்ந்த முகமது அக்பர் பாஷா (38), முகம்மது மாலிக் (29) ஆகியோர் காயமடைந்தனர்.
உடனடியாக, அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்பூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புனே: நான்காம் மாடி ஜன்னலில் தொங்கிய சிறுமி மீட்பு