திருப்பத்தூர்: கௌதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் முகேஷ்வரன் (21). இவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி தற்போது பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதன் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் விஜய்பிரசாந்த் (21), முகேஷ்வரனிடம் "பெண் குழந்தை பிறந்துள்ளது. பார்ட்டி இல்லையா" எனக் கேட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இருவரும் கௌதம்பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி கழிவறை முன்பு, விற்கப்படும் கஞ்சாவை வாங்கிக் கொண்டு பார்ட்டிக்கு தயாராகின்றனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில் பார்ட்டி வைக்க வந்த முகேஷ்வரன் விஜய் பிரசாத்தை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பின்பு அங்கிருந்து முகேஷ்வரன் தப்பி ஓடிய நிலையில் அக்கம்பக்கத்தினர் மயங்கி கிடந்த விஜய் பிரசாத்தை நேற்று இரவு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் முகேஷ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் தீண்டாமை கொடுமை? திடீர் சாலை மறியலால் பரபரப்பு!