ETV Bharat / state

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா : 300க்கும் அதிகமான காளைகள் பங்கேற்பு! - வாணியம்பாடி அருகே திரௌபதி அம்மன் மயில் திருவிழா

வாணியம்பாடி அருகே திரௌபதி அம்மன் மயில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற எருது விடும் திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா
வாணியம்பாடி அருகே எருது விடும் விழா
author img

By

Published : Jan 21, 2021, 9:28 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் திரௌபதி அம்மன் மயில் திருவிழாவை முன்னிட்டு 65 ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைப்பெற்றது.

இதில், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், குப்பம் ஆகிய பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்ப்பட்ட எருதுகள் பங்கேற்றன. இந்த எருது விடும் திருவிழாவில் பங்கேற்ற காளைகள், கால்நடை மருத்துவர்களின் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வாடிவாசல் கொண்டு வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.

இந்த எருது விரட்டில், குறைந்த நொடிகளில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.51,000, இரண்டாம் பரிசாக ரூ. 41,000, மூன்றாம் பரிசாக ரூ.31,000 வழங்கப்பட்டது.

இத்திருவிழாவை பல்வேறு ஊர்களிலிருந்த 5000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மற்றும் பெண்கள் கண்டு ரசித்தனர். இவ்விழாவில் காளைகள் முட்டி, 20 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு அரசு சார்பில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விழாவில் 50க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க: உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டுத் தரக் கோரி உறவினர்கள் மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.