கும்பகோணம் திருநள்ளாறு கிராமத்தைச் சேர்ந்தவர் டி. சிவானந்தம் (38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரிவில் வேலை செய்துவந்துள்ளார்.
கடந்த 12ஆம் தேதி திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சிவானந்தம் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கினார். பிறகு சிகிச்சைக்காக சி.எம்.சி. மருத்துவமனையில் சிவானந்தம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று இரவு 7 மணி அளவில் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதையடுத்து, உறவினர்கள் அனுமதியுடன் சிவானந்தத்தின் உடல் உறுப்புகள் தானம்செய்யப்பட்டது. அதன்படி கல்லீரல், சிறுநீரகம், இருதயம் ஆகியவை வேலூர் சி.எம்.சி., சென்னை அப்போலோ மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதையும் படிங்க... மூளைச்சாவு அடைந்த கவுரவ விரிவுரையாளர் உடல் உறுப்புகள் தானம்!