ETV Bharat / state

திருப்பத்தூரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்! - தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

author img

By

Published : Jan 10, 2022, 1:23 PM IST

திருப்பத்தூர்: இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் பரவலும் வேகமெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (ஜன.10) ஒரே நாளில் 12 ஆயிரத்து 895 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று (ஜன.10)தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தொடங்கிவைத்தார்.

ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு சார் ஆட்சியர் பானு, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விஜயன், செவிலியர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Covid cases in India: நாட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.