திருப்பத்தூர் மாவட்டத்தையடுத்து கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஏழுமலை. இவரது மகன் முத்து (33) ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி வேதவல்லி (30) என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முத்து தினதோறும் அப்பகுதியில் கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் ஆட்டோ ஓட்டுநர் முத்து இரவு முழுவதும் வீட்டிற்குத் திரும்பாததால் அவருடைய குடும்பத்தார் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது அதே பகுதியில் கிணற்றில் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதனைக்கேட்டு பதறியடித்து கிணற்றில் சென்று அவரது குடும்பத்தினர் பார்த்தபோது முத்து சடலமாகக் கிடந்துள்ளார். பிறகு இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.