ETV Bharat / state

டிராக்டர் - லாரி மோதி விபத்து: 11 பேர் படுகாயம் - tirupattur tractor collides lorry

திருப்பத்தூர்: சங்கராபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

at-tirupattur-tractor-collides-lorry-leads-to-11-people-injured
டிராக்டர் - லாரி மோதி கொண்ட விபத்தில் 11 பேர் படுகாயம்
author img

By

Published : Mar 13, 2020, 5:35 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் சங்கராபுரம் அருகே திருப்பத்தூர் - திருவண்ணாமலை பிரதான சாலையில் சின்னகண்ணாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயியான முனிராஜ் தனக்கு சொந்தமான டிராக்டரில் ஓட்டுநர் உட்பட 11 பேருடன் சென்றுள்ளார்.

திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி திரும்ப நினைத்து எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. டிராக்டரின் டிரெய்லரில் அமர்ந்திருந்த சிங்காரி (45), கௌரி (40) ஆகிய இரண்டு பெண் கூலி தொழிலாளிகள் உள்பட லாரி ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் சாமர்த்தியமாக வண்டியை திருப்பியதால் அதில் பயணம் செய்த 11 பேர் காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினர். இதனைக் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிராக்டர் - லாரி மோதி கொண்ட விபத்தில் 11 பேர் படுகாயம்

இதையும் படிங்க: சாலை விபத்து - எடாவாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.