ETV Bharat / state

திருப்பத்தூரில் நேர்முகத்தேர்வு திடீரென நிறுத்தம் - விண்ணப்பதாரர்கள் சாலை மறியல்!

கால்நடை மருத்துவமனைக்கான மருத்துவர் உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு திடீரென நிறுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் நேர்முகத்தேர்வு திடீரென நிறுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியல்

author img

By

Published : Apr 28, 2022, 11:04 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர் உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு கடந்த 26ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் 19 கால்நடை மருத்துவர் உதவியாளர் பணிக்கு மாவட்டம் முழுவதும் சுமார் 3100 நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இதனையடுத்து 26 மற்றும் 27ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று கால்நடை துறை அலுவலர்களால் தற்காலிகமாக நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்ப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள காலை முதல் வந்து இருந்த நிலையில் திடீரென நேர்முகத் தேர்வு நிறுத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் 500-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் மெயின் ரோடு ஆசிரியர் நகரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூரில் நேர்முகத்தேர்வு திடீரென நிறுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியல்!

இதையும் படிங்க:தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் புல்வாமாவில் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.