திருப்பத்தூர் கோட்டைத் தெரு பகுதியைச் சேர்ந்த மதீன், அவரது நண்பர் சுஹேல் இருவரும் உறவினர் நிகழ்ச்சி ஒன்றிற்காக இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே கரோனா சிகிச்சை முகாம் நடந்துகொண்டிருப்பதைக் கண்டு பயந்து திரும்பிச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், திருமணமாகி ஒரே மாதமே ஆன இளைஞர் மதீன் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அவருடன் வந்த சுஹேல் படுகாயங்களுடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த அம்பலூர் காவல் துறையினர் மதீனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளைஞர் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரியலூர் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!