ETV Bharat / state

கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்த திமுக உறுப்பினர்கள்!

author img

By

Published : Feb 6, 2023, 6:36 AM IST

திமுக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்த பலர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை திமுக ஒன்றியச் செயலாளர் காசி தலைமையில், திமுக உறுப்பினர்கள் பலர் முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஜோலார்பேட்டையில் உள்ள ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக உள்பட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியை மேடையில் பேசிய கே.சி.வீரமணி, "தேர்தல் காலத்தில் திமுகவினர் சந்தர்ப்ப சூழ்நிலையால், பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றனர்.

திமுகவினர் ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆன நிலையில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் அவல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார். இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"கூடா நட்பு கேடாய் முடியும்": நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.