திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலையில் உள்ள சோளக்கொள்ளை மேடு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் சோளக்கொள்ளை மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈட்டுப்பட்டிருந்த போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராணி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த 25 கஞ்சா பொட்டலங்கல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி மாணவனின் ரசிகரான டிஜிபி சைலேந்திரபாபு