திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் வீட்டில் வளர்க்கும் பூனைக் கறியை மான் கறி எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்றுவருவதாக ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனத் துறையினர் அங்கு பொதுமக்களிடம் கறி விற்றுக்கொண்டிருந்த நபரைப் பிடித்து அவரிடமிருந்த கறியை சோதனைசெய்தனர்.
அதில், பூனைக் கறியை மான் கறி எனப் பொதுமக்களை ஏமாற்றி விற்றுவந்ததும், அந்த நபர் நமாஸ் மேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் மணிகண்டனைக் கைதுசெய்து அவரிடமிருந்த நான்கு கிலோ பூனைக் கறியை பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேபோல், ஆம்பூர் அடுத்த வட வெள்ளக்கல் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிவந்த காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரைக் கைதுசெய்து அவரிடமிருந்த 9.5 கிலோ மான் இறைச்சியை வனத் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரை வனத் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:பாலக்கோடு அருகே மான்கறி விற்ற இருவர் கைது!