திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாலனங்குப்பம் கூட்டு ரோடு பகுதியில், ஜோலார்பேட்டை காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை காவல் துறையினர், துரத்திப் பிடிக்க முற்பட்டனர். இதனிடையே திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி, அதிவேகமாக வந்த 108 ஆம்புலன்ஸை, இயக்கிய ஓட்டுநர் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஆம்புலன்ஸை நிறுத்த முயன்றார்.
இதில் நிலைதடுமாறிய 108 ஆம்புலன்ஸ், அருகில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!