ETV Bharat / state

சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் - முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி - மஜக பிரமுகர் வசீம் அக்ரம்

வாணியம்பாடியில் கடந்த மாதம்  8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி
author img

By

Published : Oct 26, 2021, 1:37 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு, தனது ஏழு வயது குழந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம்.

இந்நிலையில் நேற்று(அக்.25) அக்குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவியை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மஜக பிரமுகரும், சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியிருப்பது உங்கள் குடும்பத்தினருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

அமைச்சர் கே.சி வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதற்கு இது ஒன்றே சான்றாகும். இந்தச் செயல், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும், இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆளும்கட்சி முதலமைச்சர் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:விருது இரண்டு, இயக்குநர் ஒன்று- வெற்றிமாறன் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.