திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டியப்பனூர் பகுதியில் உள்ள 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்க அணை சரிவர பராமரிக்கப்படாததால் அணையினை புனரமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அனணயிணை புனரமைக்க 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டியப்பனூர் அணை சுற்றுலாத்தலமாக்கப்படும் என அறிவித்தார்.
பின்னர் அதற்காக குழந்தைகள் விளையாட்டுத் திடல், பூங்கா அமைத்தல், நடைபாதை, படகு இல்லம், விருந்தினர் மாளிகை உள்ளிட்ட பணிகளுக்காக 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் நீர்த்தேக்க அனண புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை வாணியம்பாடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரிடம் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், அணையில் தண்ணீர் நிரம்பி வெளியேறும் சுரங்கப்பாதைக்குள் சென்று பார்வையிட்டும், அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை பாசன வசதிக்காகப் பயன்படுத்த வீணாகாமல் பாதுக்காக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் பொதுப்பணித் துறை அலுவலர்கள், ஒப்பந்தாரருக்கு கோரிக்கைவிடுத்து பேசினார். ஆய்வின்போது அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.