ETV Bharat / state

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கடைகள் - அதிகாரிகள் நடவடிக்கை!

திருப்பத்தூரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த இறைச்சி கடைகளில் இருந்த இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Action against unhygienic butcher IN Tirupattur  சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கடை நடத்தி வந்த நபர்கள் மீது நடவடிக்கை!
சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கடை நடத்தி வந்த நபர்கள் மீது நடவடிக்கை!
author img

By

Published : Mar 22, 2022, 7:35 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சுல்தான் மியான் தெருவில் உள்ள 24,25,27 ஆகிய வார்டுகளில் அப்பகுதியைச் சேர்ந்த ஷா முகமது (44), பாரூக் (47), தாஜ் (37), அப்பு(30) ஆகியோர் மாட்டு இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இறைச்சியில் இருந்து வரும் கழிவுகள் அருகே உள்ள கால்வாயில் கலப்பது மட்டுமின்றி, மாட்டின் தோலினை மிக நீண்ட நாட்களாகப் பதப்படுத்தி வைத்துள்ளதாகவும் அதிலிருந்து வெளியேறும் நுண்ணுயிர்கள் மூலம் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாகக் கூறி நகராட்சி ஆணையர், அதிகாரிகளிடம் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நகராட்சி கமிஷனர் ஜெயராம ராஜா மற்றும் துப்புரவு ஆய்வாளர் விவேக் கட்டிட ஆய்வாளர் கௌசல்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நாட்களாகப் பதப்படுத்திய வைத்திருந்த தோல் கழிவுகள், மற்றும் கால்வாயில் கலக்கப்பட்ட மாட்டிறைச்சி இரத்தம் மற்றும் தரமற்ற முறையில் இருந்த மாட்டு இறைச்சிகளை் கைப்பற்றி பஉச நகரில் அமைந்துள்ள உரக்கிடங்கில் புதைத்தனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடை பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:புதையல் பேராசையில் பல லட்சங்களைத் தொலைத்த அப்பாவிப் பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.