தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு அரசும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டம், ஒங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்டக் கூட்டறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் ”வாக்களிப்பது நமது கடமை - தேர்தல் நாள் ஏப்ரல் 6” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் அச்சிடப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டை மாவட்ட ஆட்சியர் சிவனருள் இன்று (மார்ச்.26) வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஒருங்கிணைந்த வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில், தினசரி ஆவின் நிறுவனம் சுமார் ஒரு லட்சத்து 30ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது.
அதில், சுமார் 62 ஆயிரம் லிட்டர் பால் உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தலா 10 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள சுமார் 54 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்கினை தவறாமல் செலுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ’எதிர் காலத்தில் உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் வரும்’ - மத்திய அரசு