திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே உள்ள அக்ராவரம் ஏழுமலையான் வட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன் (35). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த வள்ளியம்மாள் (26) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சம்சா (5), முத்தரசி (2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி இரவு தனது தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அன்பழகனிடம், வள்ளியம்மை கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அன்பழகன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தம்பதியர் இருவரும் தனித்தனி அறைகளில் உறங்கியுள்ளனர். அப்போது தனது 2 வயது மகள் முத்தரசிக்கு விஷம் கொடுத்துவிட்டு, வள்ளியம்மாளும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
பின்னர் நேற்றுமுன்தினம் (மார்ச் 2) தாய், மகள் இருவரும் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்பழகன், உடனடியாக இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் நேற்று (மார்ச் 3) பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தை முத்தரசிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு சிறை - போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி