ETV Bharat / state

நலத்திட்ட உதவி - விடுபட்ட 52 மாற்றத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்!

திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் விடுபட்ட மாற்றத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது.

நலத்திட்ட உதவி விடுபட்ட மாற்றத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்

author img

By

Published : Dec 10, 2022, 10:58 PM IST

திருப்பத்தூர்: ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஏடிஐபி திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும், அலிம்கோ நிறுவனமும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஏற்கனவே நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

அதில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் சமூக வலுவூட்டல் முகாம் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் நடைபெற்றது.

ஏற்கனவே கடந்த மாதம் இதே திட்டத்தின் கீழ் 631 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 33 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்துகொள்ள இயலாத 52 பயனாளிகளுக்கு சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரி வீல் சேர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவி விடுபட்ட மாற்றத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள்

இந்த விழாவில் ஜோலார்பட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெரும் புயலில் இருந்து அரசின் நடவடிக்கையால் சென்னை நகரம் காப்பாற்றப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.