ETV Bharat / state

இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு! - Tirupattur Crime News

திருப்பத்தூர்: முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பத்தூரில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு  திருப்பத்தூர் இருசக்கர வாகன விபத்து  திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்  இருசக்கர வாகன விபத்து  Tirupattur Bike Accidents  A Old Man Dead By Bike Accident In Tirupattur  Bike Accident  Tirupattur Crime News
A Old Man Dead By Bike Accident
author img

By

Published : Dec 21, 2020, 1:55 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் கஜல் நாயக்கம்பட்டி அண்ணாநகர் பகுதியில் வசித்துவந்தவர் பெருமாள் (80). இவருக்கு சின்ன பாப்பா என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண், மூன்று ஆண்கள் உள்பட ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மனைவி சின்ன பாப்பா இறந்துவிட்டார். இந்நிலையில், பெருமாள் மாதந்தோறும் வரும் முதியோர் ஓய்வூதியப் பணத்தை பெற்றுக்கொண்டு புங்கனூர் பகுதியிலுள்ள தன்னுடைய மகள் மாது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

விபத்து

அப்போது, திருப்பத்தூரை நோக்கி எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பின் பக்கமாக சரிந்து விழுந்த பெருமாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடற்கூராய்வு

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் துறையினர் பெருமாளின் உடலைக் கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவடியில் பைக் மீது வேன் மோதி விபத்து - பொறியாளர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.