ETV Bharat / state

சந்தேகப்பட்ட கணவன் - கூலிப்படையை வைத்து கொலை செய்த மனைவி - கணவர் சந்தேகம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே உறவினர்கள் மூலம் கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மாமியார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர் அருகே உறவினர்கள் மூலம்
ஆம்பூர் அருகே உறவினர்கள் மூலம்
author img

By

Published : Sep 3, 2020, 1:53 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு, இவர் மின் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி மகள் ஜெயந்தி மாலா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

ஜெயந்திமாலா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், ரமேஷ்பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின் துறை ஒப்பந்த வேலையை விட்டு விட்டு சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் ரமேஷ்பாபுவின் மனைவி ஜெயந்திமாலா பணிக்கு சேர்ந்திருக்கிறார்.

இரவு 8 மணிக்கு பணி முடித்துவிட்டு வீடு திரும்பவும் ஜெயந்தி மாலா, மீண்டும் 10 மணிக்கு மருத்துவமனையில் பணி இருப்பதாக கூறிவிட்டு இரவு நேரத்தில் அடிக்கடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மனைவின் மீது சந்தேகமடைந்த ரமேஷ் பாபு இதுகுறித்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜெயந்தி மாலா தனது தாய் சரஸ்வதியிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து ரமேஷ்பாபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சரஸ்வதியின் உறவினரான ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியில் உள்ள ராமர் என்பவரின் மூலம் கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ரமேஷ் பாபு வாணியம்பாடி பகுதிக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் அவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக காயங்களுடன் உயிர் பிழைத்த ரமேஷ் பாபு, அப்போது நண்பர்களின் அறிவுரையை ஏற்று காவல்துறையில் புகார் ஏதும் கொடுக்காமல் விட்டுள்ளார். இதனால் மீண்டும் ரமேஷ் பாபுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி மற்றும் மாமியார் இருவரும் மீண்டும் ராமர் மூலம் கூலிப்படையை அழைத்து விபத்து ஏற்பட்டிருந்தால் விபத்து காப்பீடு கிடைக்கும் 5 லட்சம் ரூபாயை கூலிப்படை பெற்றுக்கொள்ளலாம் என ஐந்து லட்சம் ரூபாய்க்கு பேரம்பேசியுள்ளனர்.

கடந்த மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை இரவு ரமேஷ் பாபு, தனது கிராமத்தின் அருகிலுள்ள பாலாற்றின் கரையோரம் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மது அருந்த உறவினர் அழைத்ததாக தனது நண்பரான மனோகர் என்பவரை அழைத்து கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்றபோது திடீரென மனோகரன் தனது வீட்டிலிருந்து மனைவி அழைப்பதாக கூறிவிட்டு உறவினர்களிடம் விட்டு விட்டு வந்துள்ளார். அங்கு ராமரின் நண்பர்களான மிட்டாளம் பகுதியை சேர்ந்த கௌதம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஆம்பூர் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமான மதுவை ரமேஷ் பாபுவிற்கு கொடுத்து அவருடன் குடும்ப பிரச்னை குறித்து ராமர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராமர் கூலிப்படையோடு சேர்ந்து ரமேஷ்பாபுவை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அருகிலுள்ள தரை பாலத்தின் அடியில் போட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தையும் அருகில் நிறுத்தி விட்டு விபத்து ஏற்பட்டது போல் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து மனைவி ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடி கணவனைக் காணவில்லை என ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் கடந்த 28ஆம் தேதி இரவு புகார் அளித்ததன் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஆலாங்குப்பம் பாலத்தின் அடியில் ரமேஷ் பாபு சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரமேஷின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் கைரேகை நிபுணர் பாரி மற்றும் பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு கைரேகைகள் பதிவு செய்தனர். அதில் ரமேஷ்பாபு அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும் இந்த வழக்கில் சந்தேகம் அடைந்த போலீசார் ரமேஷ் பாபுவை மது அருந்த அழைத்துச் சென்ற மனோகரனை பிடித்து இரண்டு நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ரமேஷ் பாபுவின் மாமியார் சரஸ்வதியின் உறவினரான மிட்டாளம் பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் ரமேஷ் பாபுவை கடந்த மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை மது அருந்த அழைத்ததால், நானும் பாபுவும் மது அருந்த சென்றோம். வீட்டில் இருந்து எனக்கு அழைப்பு வந்ததால் நான் மட்டும் தனியாக வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் ராமரை கைது செய்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உறவினரான சரஸ்வதி தனது மகளை ரமேஷ்பாபு சந்தேகப்பட்டு தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இதனால் தமது மருமகனை தீர்த்துக்கட்ட வேண்டும் என தெரிவித்ததன் பேரில் ராமர் தனது நண்பர்களான மிட்டாளம் பகுதியை சேர்ந்த கௌதம் மற்றும் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷ் பாபுவை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

தொடர்ந்து 4 நாட்களாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்ததில், ரமேஷ் பாபுவின் மனைவி ஜெயந்திமாலா மற்றும் அவரது தாய் சரஸ்வதி ஆகியோர் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் இந்த வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.