ETV Bharat / state

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தவருக்கு அரிவாள் வெட்டு - Extramarital affair death in Tiruppathur

திருப்பத்தூரில் தனது மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட நபரை கணவர் அரிவாளால் சராமாரியாக தாக்கியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 21, 2022, 12:33 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் தனியார் மின்சாதனை பொருட்கள் விற்பனை கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி அருள்மொழி என்பவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது.

இதனையறிந்த சதீஷ் இருவரையும் பல முறை கண்டித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் கண்டுகொள்ளாமல் இருந்துவந்துள்ளனர். இந்த நிலையில் சதீஷ் நேற்று (ஆகஸ்ட் 20) அரவிந்த் பணிபுரியும் கடைக்கு வெளியே அரிவாள் உடன் சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அரவிந்தை மீட்ட சக ஊழியர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னையும் என் மகனையும் அண்ணன், தம்பி என நினைப்பார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.