திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து முதல்நிலை டிக்கெட் பரிசோதகர் உமாபதி மற்றும் பிச்சை ஆகியோர் தலைமையிலான குழுவினர் அரசுப்பேருந்துகளில் டிக்கெட் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர்.
இந்நிலையில் சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி அரசு குளிர்சாதனப்பேருந்து ஒன்று ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, அதில் டிக்கெட் பரிசோதனை செய்தனர். அப்போது சில பைகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான 2 இளைஞர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பதை உறுதி செய்த டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் 2 பேரையும் காவல் நிலையத்தில் அழைத்துச்சென்று, தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த சரத் மாலிக் மற்றும் ரஞ்சித் குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களைக்கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போலீஸ் போல் நடித்து வியாபாரி கடத்தல் - 5 லட்சம் பறித்த கொள்ளை கும்பல் கைது