தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 2) ஒரே நாளில் 5875 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613ஆக அதிகரித்துள்ளது.
இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1234ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 745 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் 30,829 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 1445 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.