ETV Bharat / state

திருப்பத்தூரில் கலை நிகழ்ச்சியுடன் சர்வதேச சதுரங்க போட்டி!

தமிழ்நாட்டில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக, ஜோலார்பேட்டை இடையாம்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது.

44 வது செஸ் போட்டி
44 வது செஸ் போட்டி
author img

By

Published : Jul 17, 2022, 8:47 PM IST

திருப்பத்தூர்: சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 188 நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பள்ளி மாணவ, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதன்பொருட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா ஜோலார்பேட்டை அருகே இடையாம்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

இடையாம்பட்டி அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய 44ஆவது செஸ் போட்டி

இந்தப் போட்டியில், 12 பள்ளிகளைச் சேர்ந்த 94 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள், சென்னை மகாபலிபுரத்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விழாவில் சார் ஆட்சியர் லட்சுமி, வட்டாட்சியர் பூங்கொடி, திமுக நகரச்செயலாளர் அன்பழகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ள நிலையில் தரையில் அமர்ந்து செஸ் விளையாடிய மாணவர்கள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.