திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான மாத கடப்பா, வெலதிகாமனி பென்டா, தேவராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி, உதவி ஆய்வாளர் சிவக்குமார், பழனி உள்ளிட்ட 20 காவலர்கள் கொண்ட குழுவினர் மலைப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்த 3000 லிட்டர் ஊறல்களை காவல் துறையினர் அழித்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கடப்பா பகுதியைச் சேர்ந்த பையோடன் , தியாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் ஆகிய இருவரைக் கைது செய்து மதுவிலக்கு காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: காலில் விழ வைத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு