திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் மினிலாரி நிற்காமல் சென்றதால் அவற்றை ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் பின்தொடர்ந்துள்ளனர். இதனைக் கண்ட ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
பின்னர் அந்த மினி லாரியை சோதனை மேற்கொண்டபோது அதில் வெளிமாநிலத்திற்கு கடத்தி எடுத்துச்செல்லப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் 2 டன் ரேஷன் அரிசியை ஆம்பூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்து இக்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிப்பு