ETV Bharat / state

வெளிமாநில லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம்: 2 பேர் கைது - காட்டன் சூதாட்டம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ஆட்டோவில் வைத்து வெளிமாநில லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

2-men-arrested-for-gambling-in-tirupattur

author img

By

Published : Nov 24, 2020, 6:16 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் ஆட்டோவில் வைத்து தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டத்தில் பலரும் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில் உம்ராபாத் காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவலர்கள், அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மறைவான இடத்தில் ஆட்டோவில் வைத்து வெளிமாநில லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 5 பேரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆம்பூர் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பர்வேஸ் அஹமத், புதுமனை பகுதியைச் சேர்ந்த கபில் அஹமத் ஆகிய இருவரும் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் அன்றாட கூலி தொழிலாளர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்துவது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உமராபாத் காவலர்கள், அந்த 2 பேரையும் கைது செய்து, சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் அவர்களிடமிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் வின்னர்ஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஒரு நெட்வொர்க்கை ஏற்படுத்தி நூதன முறையில் சூதாட்டங்களில் ஈடுபடுத்தும் முக்கிய குற்றவாளி யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குமரியில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.