தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அறிவான்மொழி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் - உடன்குடி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருச்செந்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி!