ETV Bharat / state

"மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றால் சாதனை; பிரதமர் மோடி சென்றால் விமர்சனம் செய்வதா?" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை கேள்வி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் சென்றால் சாதனை என்கின்றனர் ஆனால் பிரதமர் வெளிநாட்டு பயணம் சென்றால் விமர்சனம் செய்கிறார்கள் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 28, 2023, 12:12 PM IST

Updated : Jun 28, 2023, 1:09 PM IST

ஆளுநர் தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பு

தூத்துக்குடி: திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பிரதமர் மோடி எல்லா நேரமும் வெளிநாடு போகிறார். ஆனால் அமெரிக்க பயணமானது, அரசாங்கத்தின் தனி விருந்தினராக அவர் அழைக்கப்பட்டு உலகில் மிகச் சில தலைவர்களுக்கே கிடைத்த மரியாதை அவருக்கு கிடைத்திருக்கிறது.

அது மட்டுமல்ல, அங்கு சென்ற ஒவ்வொரு நிமிடமும் நமது நாட்டின் வளர்ச்சியை உலகிற்கு தெளிவுப்படுத்துவதில் அமெரிக்க நாட்டின் ஒத்துழைப்பு நமது வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும், இந்தியா - அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் ஒரு பிரமாண்டமான வெளிநாட்டு பயணம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் எகிப்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் அங்கு சென்று இருக்கின்றார். எகிப்தின் உயரிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய திருநாட்டிற்கு, பெருநாட்டிற்கு ஒரு பெயர் என்று தான் சொல்ல வேண்டும். உலகத்தில் மிகப் பிரபலமான தலைவர் என்ற பெருமையை பிரதமர் பெற்றிருக்கிறார். முன்னர் எந்த தீர்வாக இருந்தாலும், எதற்கு தீர்வு என்றாலும் இந்தியா மற்ற நாடுகளை எதிர்நோக்கி இருந்தது. ஆனால் இன்று மற்ற நாடுகள் இந்தியாவை நோக்கி பார்வையை செலுத்துவது நமது பிரதமரின் மிகப்பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் சென்றால் சாதனை என்கின்றனர். பிரதமர் வெளிநாட்டு பயணம் சென்றால் விமர்சனம் செய்கிறார்கள். தற்போது எல்லோருக்கும் தெரியும். வெளிநாட்டு பயணம் செய்துவிட்டு வந்து முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல எந்த அளவிற்கு மற்ற நாடுகளின் துணை நமக்கு கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும், தென்பகுதி இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். நேற்று முன்தினம் வந்தே பாரத் 25வது ரயில் பெட்டி பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் எல்லாம் இந்த பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இந்த ரயில் பெட்டிகள் நமது நாட்டில் தயாரிக்கப்பட்டு, நமது நாட்டிற்கு மட்டுமல்ல வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது. நேபால் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

பிரதமர் சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் நம் நாட்டில் எல்லாவற்றையும் தயாரிக்க வேண்டும் என்ற தயாரிப்பை உருவாக்கப்பட்டதன் காரணமாக 25வது வந்தே பாரத் ரயில் போபாலுக்கு தமிழகத்தில் இருந்து வந்தே பாரத் மூலம் இந்தியா முழுவதும் நகரங்களில் இணைக்கிறது. அது தமிழகத்தின் பங்கு இருக்கிறது என்பதை அனைவருக்கும் பெருமையான விஷயம்.

வந்தே பாரத் ரயில் தென்பகுதியில் இணைக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. மேலும் ரயில்வே துறை அமைச்சரிடம் தாம்பரத்திற்கும் புதுச்சேரிக்கும் இணைப்பு வேண்டும் என்று கேட்டுள்ளோம். அது போல் தென்பகுதியில் மக்கள் பயன்பெறும் அளவிற்கு வந்தே பாரத் ரயில் வேண்டும் என்று கோரிக்கையும் வைப்போம்.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக தென்பகுதிக்கு கிடைக்கும். அதனால் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய படி உலகிலேயே இரண்டாவது நீளமான தேசிய நெடுஞ்சாலை கொண்ட நாடாக இந்தியா மாறி இருக்கிறது.

ஆக இணைப்பு வந்தாலே வளர்ச்சி வந்துவிடும் என்று கூறியவர், தூத்துக்குடி துறைமுகத்திற்கு உள்ளே கூட பல கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார்கள். தென் பகுதியும் மத்திய அரசின் பல முயற்சியால் வளர்ச்சி அடைய இருக்கிறது. அதுவும் தற்போது குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் வந்துவிட்டால் நமது தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே எல்லா விதத்திலும் தென்பகுதி வளர வேண்டும் என்பது என்னுடைய பங்கு இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு நீங்களே யூகித்து கேளுங்கள்" என்று கூறி சென்றார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் டிராஃபிக் போலீஸ் அதிரடி சோதனை.. சிறுவர்கள் ஓட்டிய, நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளுக்கு அபராதம்!

Last Updated : Jun 28, 2023, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.