முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96ஆவது பிறந்த நாள் நேற்று (டிசம்பர் 25) கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பஜாரில் பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில், தொழிலதிபர் ஜெபக்குமார் தலைமையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96ஆவது பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடினர்.
இதை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாயின் திருவுருவப் படத்துக்கு பாஜகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு 100க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டன.