தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் நேற்று ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் இருந்து ஸ்டேட் பேங்க் வரை ஆர்எஸ்எஸ் பேரணியானது நடைபெற்றது.
இந்த பேரணியில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். பேரணியில் பங்கேற்ற நாசரேத்தைச் சேர்ந்த இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவர் வெட்டும்பெருமாள் (வயது 54) திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெட்டும்பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரூ.2.30 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல்!