தூத்துக்குடி: பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 261ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி கட்டபொம்மனின் சிலைக்கு வீரசக்கதேவி ஆலய குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முதல் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 261ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1974ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக நினைவு கோட்டை அமைத்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு வீரசக்கதேவி ஆலய குழுவினர், கட்டபொம்மன் பண்பாட்டு குழுவினர் மற்றும் ஊமைத்துரை தொண்டர் படையினர், கட்டபொம்மனின் வம்சாவழியினர், சந்ததியர்கள் என ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதையும் படிங்க: ‘யார் முன்னாடி எண்ணுனிங்க? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?’ - அலுவலரை வறுத்தெடுத்த திமுக எம்.பி.