ETV Bharat / state

மாஜி திமுக சேர்மன் சாதிய ரீதியில் திட்டியதால் துப்புரவாளர் தற்கொலை - உடலை வாங்க மறுத்து போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Mar 23, 2023, 5:07 PM IST

முன்னாள் பேரூராட்சி தலைவர் சாதிய ரீதியில் திட்டியதால் தூய்மைப்பணியாளர் தற்கொலை!

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர், சுடலை மாடன். இந்த நிலையில் இவரை பேரூராட்சித் தலைவரின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ஆயிஷா கல்லாசி என்பவர், சாதிப் பெயரைப் பயன்படுத்தி மிகவும் இழிவாக திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து தூய்மைப் பணியாளர் சுடலை மாடன், கடந்த மார்ச் 14ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுடலை மாடன் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (மார்ச் 23) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடன்குடி பேரூராட்சியின் கீழ் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர் சுடலை மாடனை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய பேரூராட்சித் தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பேரூராட்சித் தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு ஆகிய இருவரையும் கைது செய்யக் கோரியும், பேரூராட்சித் தலைவர் ஹீமைரா ரமீஷ் பாத்திமா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உயிரிழந்த சுடலை மாடனின் உறவினர்கள் ஆகியோர், உடன்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் சுடலை மாடனின் உடலை வாங்க மறுத்தது மட்டுமல்லாமல், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்துகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி திருமதி ஆயிஷா கல்லாஸி, சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்த சுடலைமாடன் அவர்கள், தற்கொலை செய்துள்ளார்.

திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எளிய மக்கள் மீதான சாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. குற்றவாளிகள் தங்கள் கட்சிக்காரர்கள் என்பதால் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கைக் கையாளுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீண்டும் இது போன்ற சாதியக் கொடுமைகள் நடக்காத வண்ணம், உடனடியாக குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்பதை பொதுமக்களுக்கு வேண்டுகோளாக விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளியில் ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் - பெற்றோர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.