தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆடுகள் திருடு போயிருந்தன. இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் பேருந்து நிறுத்தத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் கால்வாயைச் சேர்ந்த நம்பி, தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரியவந்தது. இருவரும் ஆடுகளைத் திருடி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், திருட்டுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வானத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 'மதுரையில் ஒரு சூனா பானா... 2 ஆண்டுகளில் 200 ஆடுகள், 50 மாடுகள் திருட்டு'