தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரம் பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் கொண்டாடும் விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விழாவிற்கு தலைமை வகித்தார். இந்த நிகழ்வின் போது, சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கவிதன் - செல்வசுயம்பு தம்பதியரின் இரட்டை மகள்கள், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்திருந்தனர்.
அதில், “எனது தந்தை கவிதன், சாத்தான்குளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது தாய் செல்வசுயம்பு திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு மாநில சீனியாரிட்டி அடிப்படையில், திருப்பூரில் ஆசிரியராக வேலை கிடைத்தது. இந்த நிலையில், அவர் பணிக்கு சேர்ந்த நாளிலிருந்து தற்போது வரை 14 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: மனித - வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரணத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!
தந்தை கவிதன், சாத்தான்குளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனது தந்தை ஒரு புறத்திலும், தாய் ஒரு புறத்திலும் வேலை பார்த்து வருவதால், தாங்கள் இருவரும் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே, தனது தாய் செல்வசுயம்புவுக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கொடுக்க வேண்டும்” என அந்த இரட்டை சிறுமிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த மனுவை வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், டிரான்ஸ்பர் வாங்கித் தருவதற்கு உடனே ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். சாத்தான்குளம் அருகே தனது தாய்க்கு டிரான்ஸ்பர் கேட்டு மனு கொடுத்த இரட்டை சிறுமிகளை அங்கிருந்தவர்கள் வியப்பாக பார்த்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி மழை பாதிப்பு; விவசாயிகளுக்கு கால்நடை வழங்க முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்