ETV Bharat / state

திருமணம் முடிந்த கையுடன் வாக்களித்த தம்பதி!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியினர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

திருமணம் முடிந்த கையுடன் வாக்களித்த தம்பதி!
author img

By

Published : Apr 18, 2019, 8:06 PM IST

தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், முதல்முறை வாக்களிப்பவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி அடுத்த கோவில்பட்டியைச் சேர்ந்த நந்தினி முனிஸ்வர பாரதி ஆகியோருக்கு அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்தில் சென்று தங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

இது குறித்து முனீஸ்வர பாரதி கூறுகையில், வாக்களிப்பது என்பது ஜனநாயகக் கடமை. இதனை நான் மணக்கோலத்தில் வந்த ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்

கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வர பாரதி. இவர் பட்டய படிப்பு முடித்து சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வருகிறார். திண்டுக்கல்லை மாரிமுத்து மகள் சந்தன மாரி என்ற நந்தினி. இவர்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வருகிறார். 

முனீஸ்வர பாரதிக்கும், நந்தினிக்கும் இன்று கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் முனீஸ்வர பாரதி தனது வாக்கை பதிவு செய்ய புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு தனது புது மனைவியுடன் வந்தார். அங்கு வரிசையில் நின்று வாக்களித்தார். இதுகுறித்து முனீஸ்வர பாரதி கூறும்போது, வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. இதனை நான் மணக்கோலத்தில் வந்த ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார் அவர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.