ETV Bharat / state

விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்

author img

By

Published : Apr 29, 2023, 5:26 PM IST

விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷை நியமனம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்
விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்

தூத்துக்குடி: சூசைப் பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (40) மற்றும் அவரது உறவினரான மாரிமுத்து (32) ஆகிய இருவரையும் அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், மணல் கடத்தல் தொடர்பாக ராமசுப்பிரமணியன் குறித்து கடந்த 13ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் துறையில் புகார் அளித்திருந்தார் என்பதும், இதன் காரணமாகவே விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷை நியமனம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், நேற்று (ஏப்ரல் 28) காலை சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலம் ஊராட்சியில் உள்ள மானத்தாள் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் என்பவரை மணல் கடத்தல் கும்பல் நடுரோட்டில் வைத்து கத்தியால் விரட்டியதால், அவர் அருகில் இருந்த தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தியுடன் விரட்டிய மணல் கடத்தல் கும்பல் - போலீசில் தஞ்சம் அடைந்த VAO!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.