ETV Bharat / state

தூத்துக்குடியில் பரபரப்பு; போலி நாகமாணிக்க கும்பல் கைது

author img

By

Published : Aug 30, 2021, 4:58 AM IST

போலி நாகமாணிக்க கல்லை விற்று பணம் பறிக்க முயன்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

fake Nagamani
fake Nagamani

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஓசனூத்து பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 51) என்பவர் அதே பகுதியில் உள்ள பழைய கட்டடத்திற்கு அருகே தான் நின்றுகொண்டிருந்தபோது தன்னை 9 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு, தன்னுடைய 2 செல்போன்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.4 ஆயிரத்தை பறித்து விட்டு சென்றதாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமாராக்களின் பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்தவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பவித்குமார் (24) என்பதும், சுப்பிரமணியத்தை மிரட்டி பணம் பறித்த 9 பேரில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.

நாகமாணிக்கம்

இவர் சுப்பிரமணியனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதன்படி, சுப்பிரமணியன் தன்னிடம் விலையுயர்ந்த நாகமாணிக்க கல் உள்ளதாகவும், அதை விற்பனை செய்ய வேண்டும் என பவித்குமார் மற்றும் ஓசனூத்து பகுதியை சேர்ந்த பழனிக்குமார் ஆகிய இருவரிடமும் கூறியுள்ளார்.

fake Nagamani
போலீஸ் நடவடிக்கை

பழனிகுமார் சுப்பிரமணியத்திடம் தூத்துக்குடி சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த செல்வம், மற்றும் மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த அரவிந்த் ஆகிய இருவரும் நாகமாணிக்க கல்லை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவிப்பதாகவும், அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு ஓசனூத்து பகுதியில் உள்ள பழைய கட்டிடத்திற்கு வருமாறு கூறியிருக்கின்றனர். இதை நம்பிய சுப்பிரமணியன் தனது இருசக்கர வாகனத்தில் நாகமாணிக்க கல்லை எடுத்துகொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.

மிரட்டல்
அங்கு பவித்குமார், பழனிகுமார், செல்வம், அரவிந்த், தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர்களான பெரியதுரை, சரவணன், பிரகாஷ், புதியம்புத்தூரைச் சேர்ந்தவர்களான சிவக்குமார், ஆகாஷ், முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்தவர்களான சிவா, இம்மானுவேல் மற்றும் வேல்முருகன் ஆகிய 12 பேர் சேர்ந்து கம்பு மற்றும் அரிவாளை காட்டி சுப்பிரமணியத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி நாகமாணிக்க கல்லை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

fake Nagamani
போலி நாகமணி
இதனையடுத்து தனிப்படைப் போலீசார் பவித்குமாரைக் கைது செய்து, அவரிடமிருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். சிசிடிவி காமிராவில் பதிவான இருச்சக்கர வாகன நம்பர்பிளேட் எண்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களின் முகவரிகளை கண்டுபிடித்து கைதுசெய்ய முற்படும்போது இரு சக்கர வாகனங்களை விட்டு விட்டு அனைவரும் தலைமறைவாகியிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற 3 இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
fake Nagamani
இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
போலிமேலும் விசாரணையில் பவித்குமாரிடம் இருந்த விலையுயர்ந்ததாக கூறப்பட்ட நாகமாணிக்க கல் போலியானதும் என்பதும், சுப்பிரமணியன் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் போலியான கல்லை விலையுயர்ந்த நாகமாணிக்க கல் என்று கூறியதும் தெரியவந்துள்ளது. போலீசுக்கு உண்மை தெரிந்தால் தானும் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் புகார்தாரர் சுப்பிரமணியனும் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
fake Nagamani
போலி நாகமாணிக்க கல் தொடர்பாக காவல் அலுவலர் பேட்டி
வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பவித்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த போலி நாகமாணிக்க கல், 2 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

இதையும் படிங்க : பாவப்பட்ட பாம்பு மனிதன் - உதவிக்கரம் நீட்டுமா தன்னார்வ அமைப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.