ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - file report

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிலை குறித்து, செப்டம்பர் 15-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு
author img

By

Published : Jun 27, 2019, 6:07 PM IST

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போரட்டாம் நடைபெற்றது. இதில் அயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர். இவர்களை கட்டுபடுத்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 13 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சி.பி.ஐ யின் இயக்குனர் சார்பாக சிறப்பு குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி, நான்கு மாதத்தில் விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் அக்டோபர் 8ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதில் 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்தத , மையப்பொருள் என்ன என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே அதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், சத்தியநாராயணன் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்ததபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் படி சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது. இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணன், சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்து 6 மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது. எனவே மீண்டும் கால அவகாசம் தேவையில்லை என்று வாதிட்டார். சிபிஐ விசாரணை சம்பந்தமாக குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன ஆகையால் இந்த வழக்கில் விசாரணை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது.

சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிலை குறித்து, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிக்க தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Intro:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை சிபிஐ தரப்பில் செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Body:சிபிஐ யின் இயக்குனர் சார்பாக சிறப்பு குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அம்மனுவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி நான்கு மாதத்தில் விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது அதனடிப்படையில் அக்டோபர் 8-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு அதில் நூறு ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளன 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன துப்பாக்கி சூடு நாள் அன்று நடைபெற்ற நிகழ்வுகள் அதற்கான காரணம் அனுமதி பெறாமல் கூறியது அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்தனவா மையப் பொருள் என்ன என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் ஆகவே அதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சிபிஐ விசாரணை செய்து வருகிறது இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளது என தெரிவிக்கப்பட்டது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணன் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது எனவே மீண்டும் கால அவகாசம் தேவை இல்லை என்று வாதிட்டார்

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சிபிஐ விசாரணை சம்பந்தமாக குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன ஆகையால் இந்த வழக்கில் விசாரணை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது ஆகையால் சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.