தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், குலையன்கரிசல் கிராம விவசாய சங்கத்தின் தலைவர் சசிவர்ணசிங், தங்களது விவசாய நிலங்களில் ஐ.ஓ.சி நிறுவினத்தின் மூலமாக தனியார் தொழிற்சாலை எரிவாயு பிதக்கக்கூடாது என ஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"விவசாய நஞ்சை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதால் சம்பந்தப்பட்ட நிலங்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார அனைத்து நிலங்களின் விவசாயமும் பாதிக்கப்படும். இதனால், எங்களது நிலங்களில் எரிவாயு பதிக்காமல் வேறு நிலங்களில் எரிவாயு பதியுங்கள் என ஐ.ஓ.சி நிறுவனத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த அவர்கள், எங்களது விவாசய நிலங்களில் அடிக்கடி எரிவாயு பதிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதனால், அவர்களது ஆரம்பக்க கட்ட பணிகளை நிறுத்தி வைக்கிறோம். இதுகுறித்து இரண்டு முறை ஏற்கனவே ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இன்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியரிடம் மனு அளித்தோம். மனுவை பெற்ற ஆட்சியர், இது குறித்து ஐ.ஓ.சி நிறுவனத்திடம் பேசி ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், விவசாய நிலங்களில்தான் எரிவாயு பதிக்கும் திட்டத்தை, நாங்கள் எந்த வித போராட்டத்திலும் ஈடுபடுவோம்" என எச்சரிக்கை விடுத்தார்.